கைலாசா நாட்டில் ராஜேந்திர பாலாஜி?; போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 26, 2021

கைலாசா நாட்டில் ராஜேந்திர பாலாஜி?; போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்!

கைலாசா நாட்டில் ராஜேந்திர பாலாஜி?; போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்!


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைலாசா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சூழலில் போலீஸ் வைத்திருக்கும் புதிய பொறியில் ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் டாடி இருக்கும் தெம்பில் ரொம்ப ஓவரா போனதன் விளைவு ஓடி ஒளியும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.


கலக்கலாக சைக்கிளில் வந்த கலெக்டர்;மக்கள் வியப்பு

இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூயமணி மனைவி குணா, தனது மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கி தரவேண்டி அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, அவரது மனைவி மாலதி ஆகியோர் மூலம் ராஜேந்திரபாலாஜிக்கு ரூ.17 லட்சம் கொடுத்ததாக புகார் வந்துள்ளது.

மேலும் மதுரை வில்லாபும் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணிக்காக சிவகாசி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜோசப்ராஜ், தனது நண்பர் தரணிதரனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்காக முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்ல தம்பி என்ற விஜயநல்லதம்பி மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை எதுவும் வாங்கி தரவில்லை என 3 பேரும் இணைய தளம் மூலமாக புகார் அளித்துள்ளனர்.

இதேபோல் மதுரை கோமதிபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் தனது மகன் ஆதித்யனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மானகசேரியை சேர்ந்த பரமகுரு, கரூர் தாந்தோனி மலை முத்துச்சாமி, திருச்சி பிரின்ஸ் சிவக்குமார் ஆகியோர் மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடாசலம் தனது மகன் டாக்டர் பாலவிக்னேசுக்கு மருத்துவத்துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக விஜயநல்லதம்பி மூலமாக ராஜேந்திர பாலாஜிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக மற்றொரு புகார் வந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார். பதிவாகி இருக்கும் புகார்கள் மீது கைது செய்யவே ஆளை காணோம் என்ற சூழலில் புதிதாக 5 புகார்கள் பதிவாகி இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து எல்லை மீறி பேசியதன் விளைவு ராஜேந்திர பாலாஜிக்கு தற்போது ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் அதிமுகவில் இருந்தாலும் முழுக்க முழுக்க பாஜக ஆதரவாளர். அதுமட்டுமல்லாமல் தீவிர இந்துத்துவ பற்றாளர். அவரது கையில் மந்திரித்து கட்டிய விதவிதமான கயிறுகளே இதற்கு சாட்சி.


No comments:

Post a Comment

Post Top Ad