போன் எடுக்காத காதலி; காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு!
காதலி போனை எடுக்காததால் விரக்தியடைந்த காதலன் யாரும் எதிர்பாராத வகையில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஷாக் தரும் முடிவை எடுத்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் பீட்டர் (27). திருமண மண்டபங்களில் டெக்கரேஷன் செய்யும் வேலை செய்து வந்தார். பீட்டர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெண்னின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பீட்டர் தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டினர். அவர் திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பீட்டர் இரும்பு குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
கைலாசா நாட்டில் ராஜேந்திர பாலாஜி?; போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்!
தகவலறிந்து புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீட்டரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுவதாவது:
பீட்டரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் 3 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த சூழலில் பீட்டர் பலமுறை போன் செய்தும் இளம்பெண் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் தனது பெற்றோர் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக கருதியுள்ளார்.
இதனால் விரக்தியில் இருந்து வந்த பீட்டர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது. ஆனாலும் பீட்டர் தற்கொலை குறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment