சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு தகவல்!
சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா இரண்டாம் அலை குறையத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமான நடைபெற்று வருகின்றன. ஒமைக்ரான் பரவல் மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும்” என அறிவித்தார்.
மேலும், நாம் அனைவரும் 2022 ஆம் ஆண்டுக்காக தயாராகி கொண்டு இருக்கிறோம். தற்போது ஒமைக்ரான் பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம். அதேசமயம், எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. “15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும். கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடைய சிறார்கள் பள்ளி ஐடி கார்டுகளை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரொம்ப குளிருது; ஈரோட்டில் கடும் பனி பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி!
பெரும்பாலான சிறார்களிடம் ஆதார் உள்ளிட்ட இதர அடையாள சான்றுகள் இல்லாமல் இருக்கலாம் என்பதால் பள்ளி ஐடி கார்டுகளை, அதாவது 10ஆம் வகுப்பு அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக கோவின் இயங்குதளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment