அடுத்த 5 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் மழை குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே
இன்று காலை சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment