கோவிலுக்கு வர தடுப்புசி கட்டாயம் இல்லை! – உத்தரவை வாபஸ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில்!
நாளை முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி என்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவிப்பு திடீரென
வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் சில கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும் அனுமதி என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்நிலையில் சபரிமலைக்கு மாலை போட்டு செல்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் தரிசனம் செய்ய செல்வதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் அவசியம் செலுத்தி இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. தற்போது அந்த அறிவிப்பு
திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்படும் என்றும், நாளை அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment