வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சாலைகள் - 8 பேர் பலி!
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.
மலேஷிய நாட்டில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான மலேஷியாவில், அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பருவமழைக் காலம். இந்த மாதங்களில் மலேஷிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்ப்பது வழக்கம். இந்நிலையில், மலேஷிய நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மலேஷிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கிளாந்தான், தெரங்கானு, பாஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவல் துறையினர், ராணுவத்தினர் என சுமார் 66,000 பேர் நாடு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
1,000 பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழைநீர் தேங்கியதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணாக இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேஷியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான வெள்ளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment