ஒமைக்ரானை வீழ்த்த கபசுர குடிநீர்?- ஆராய்ச்சிகள் தீவிரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 20, 2021

ஒமைக்ரானை வீழ்த்த கபசுர குடிநீர்?- ஆராய்ச்சிகள் தீவிரம்!

ஒமைக்ரானை வீழ்த்த கபசுர குடிநீர்?- ஆராய்ச்சிகள் தீவிரம்!


ஒமைக்ரானுக்கு கபசுர குடிநீர் வழங்குவது குறித்த ஆராய்ச்சிககள் நடைபெற்று வருவதாகவும், கொரோனா இரண்டாம் அலையில் நோய் பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவ முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 0.01% சதவிகிதத்தினர் மட்டுமே சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மருத்துவ மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத் துறை சார்பில் ஐந்தாவது சித்த மருத்துவ திருநாள், நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கலந்துகொண்டு சித்த மருந்து கண்காட்சி மற்றும் சித்த மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், சித்த மருத்துவ ஆர்வலர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர, இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் செய்தியாளர்களிடம் கூறியது:

கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று. இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் சித்த மருந்து நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

நாள்பட்ட நோய்களுக்கு மட்டுமே சித்த மருந்து என்ற நிலை மாறி நீரழிவு நோய் , தொற்றா நோய்களுக்கும் சித்த மருந்துகளில் நல்ல பலன் கிடைப்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பின் சித்த மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி 408 சித்த மருத்துவ நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனை அல்லாத இடங்களில் சித்த மருந்துகளைப் பெற்று பொதுமக்கள் உபயோகிக்கும்போது மருந்து தயாரிப்பதற்கான உரிமம், மருந்துக்கான சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பின்னர் பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டும்.

கபசுரக் குடிநீர் உடலில் வைரஸ் எண்ணிக்கை பரவாமல் தடுக்கும் மருந்து. கொரோனாவுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் லைரஸ் தொற்றுக்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..

கபசுரக் குடிநீர் நல்ல மருந்தாக செயல்படும். சர்வதேச அளவில் கபசுரக் குடிநீருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வது அலையில் சித்த மருத்துவமனை மூலம் 69 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணம் அடைந்தனர்.

இவர்களுக்கு சித்த மருந்து மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டு நோய்த்தன்மை குறைக்கப்பட்டு பூரண நலம்பெற செய்யப்பட்டது. சித்த மருத்துவ முறையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 0.01% மட்டுமே சிக்கலான நிலைக்கு நோயாளிகள் சென்ற பரிந்துரை விகிதம் என்று பிச்சையா குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad