திமுக அரசின் திட்டத்துக்கு எதிராக களமிறங்கிய பாஜக எம்எல்ஏ!
சிப்காட் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது எனக் கூறி, கிராம மக்களுடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மனு அளித்தார்.
ருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இதனை ஒட்டிய பகுதிகளான கங்கைகொண்டான், ராஜபதி, துறையூர், சித்தார் சத்திரம், பருத்தி குளம் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது சூரிய மின்சக்தி உற்பத்திக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பாணையை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கங்கைகொண்டான் சிப்காட் பகுதியை ஒட்டிய கிராமப் பகுதிகளில் மக்களின் பிரதான தொழில் விவசாயம், ஆடு, மாடுகள் மேய்ப்பது. தற்போது ஆடு, மாடு மேய்ச்சல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களை சூரிய மின்சக்தி அமைப்பதற்காக கையகப்படுத்த போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.
No comments:
Post a Comment