சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.93.3 லட்சம் தங்கம்: சுங்கத்துறையினர் பறிமுதல்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள்
ஏறிக் கொண்டே இருப்பதை அடுத்து தங்கத்தை வெளிநாட்டில் கடத்தி வருவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது
சென்னை உள்பட பல சர்வதேச விமான நிலையங்களில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் துபாய், சார்ஜா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.23 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்
செய்ததாகவும் இதன் மதிப்பு ரூபாய் 93.30 லட்சம் என்றும் கூறப்படுகிறது
மேலும் இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment