மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 19, 2021

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?




மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த முறை அரையாண்டுத் தேர்வு நடைபெறவில்லை. வழக்கமாக, அரையாண்டுத் தேர்வு முடிந்த கையோடு, மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி, விடுமுறை அளிக்கப்படும். இந்த முறை தேர்வு நடைபெறாததால், விடுமுறை எப்போது விடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.

விடுமுறை தொடர்பான அறிவிப்பு பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. வரும் 25 ஆம் தேதி முதல், ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை என மொத்தம் 9 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை கால விடுமுறை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad