Aus vs Eng: ‘3ஆவது டெஸ்ட்’…மீண்டும் அதே தவறை செய்யும் இங்கிலாந்து: கோச் திட்டியும் பயனில்லை!
இங்கிலாந்து அணி மீண்டும் அதே தவறை செய்து வருகிறது.
ஆஷஸ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பி, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மற்றும் 200+ ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் துவங்கியுள்ளது.
மெல்போர்னில் துவங்கியுள்ள இந்த டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்:
இங்கிலாந்து அணியில் ஓபனர்களாக ஹசீப் ஹமீது, ஜாக் கிரௌலி ஆகியோர் களமிறங்கினர். கடந்த இரண்டு டெஸ்ட்களிலும் இங்கிலாந்து ஓபனர்கள் சொதப்பிய நிலையில், இப்போட்டியில் அது தொடர்ந்தது. ஹமீது 0 (10), கிரௌலி 12 (25) இருவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டி, இங்கிலாந்துக்கு துவக்கத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து டேவிட் மலான், ஜோ ரூட் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஒருபக்கம் மலான் நிதானம் காட்ட, மறுபக்கம் ரூட் தொடர்ந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், முதல்நாள் முதல் செஷனின் இறுதி ஓவரில் மலான் 14 (66) ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார். இந்த மூன்று விக்கெட்களையும் ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் பாட் கம்மின்ஸ்தான் எடுத்துக் கொடுத்தார்.
இங்கிலாந்து அணி தற்போதுவரை 61/3 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், முதல் நாள் முதல் செஷன் நிறைவடைந்துள்ளது. ஜோ ரூட் 33 (59) களத்தில் இருகிறார். இரண்டாவது செஷனின்போது பென் ஸ்டோக்ஸ் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோச் அதிருப்தி:
இங்கிலாந்து அணியின் பயிற்சியால் கிறிஸ் சில்வர்வுட், பயிற்சியின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதல் டெஸ்ட்களில் ஆடிய வீடியோக்களை போட்டுக்காட்டி, இனியும் இதேபோல் தவறு செய்யக் கூடாது எனக் கூறி, வீரர்களை கண்டித்திருந்தார். இந்நிலையில், அவர்கள் மீண்டும் அதே தவறை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment