வடிவேலுவை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா
Covid 19: வடிவேலுவை அடுத்து அவரின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் வடிவேலு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அந்த படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சுராஜ், வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் லண்டனுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பினார்கள். நாடு திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். வடிவேலுவை அடுத்து சுராஜுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவரையும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தானும், வடிவேலுவும் நலமாக இருப்பதாக சுராஜ் தெரிவித்துள்ளார். வடிவேலுவும், சுராஜும் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment