baking soda vs baking powder : எது நல்லது ? பேக்கிங் சோடாவா ? பேக்கிங் பவுடரா ? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 28, 2021

baking soda vs baking powder : எது நல்லது ? பேக்கிங் சோடாவா ? பேக்கிங் பவுடரா ? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

baking soda vs baking powder : எது நல்லது ? பேக்கிங் சோடாவா ? பேக்கிங் பவுடரா ? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?



பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.
பேக்கிங் பவுடருக்கும் பேக்கிங் சோடாவுக்கும் இடையில் குழப்பமாக இருந்தால் உங்களுக்கு இங்கு பதில் கிடைக்கும். பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டும் புளிப்புத்தன்மை கொண்டவை. எண்ணற்ற சுவையான உணவுகளின் அமைப்பு மற்றும் சுவையில் வெவ்வேறு விளைவுகளை உண்டாக்குகின்றன.

பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டுமே தனித்துவமான பொருள்கள். பேக்கிங் பவுடரில் இருந்து பேக்கிங் சோடாவை வேறுபடுத்துவது என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
​ஃபார்முலா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் அல்லது சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு இராசயன கலவை. இது மோர், தயிர் அல்லது வினிகர் போன்ற அமிலங்களுடன் தொடர்பு கொள்ளும் போது புளிப்பு முகவராக பயன்படுத்தப்படுகிறது.

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர் என்பது பொதுவாக பேக்கிங் சோடா ஒரு அமிலம் மற்றும் சோளமாவு கலந்த கலவையாகும்.

​இராசயன எதிர்வினைகள்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா என்பது தூய்மையான புளிப்பு முகவர் மற்றும் ஈரப்பதம் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமில மூலப்பொருள்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.



பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடரை தனியாகவே நேரடியாக பயன்படுத்தலாம்.

​சுவை

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா அடிப்படையிலேயே கசப்பான சுவையை அளிக்கிறது. சமையலில் பயன்படுத்தும் போது இதை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அளவு அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். தேவையான உணவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



பேக்கிங் பவுடர்

இது நடுநிலைத்தன்மை கொண்ட இது சுவையானது. சமையலில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல சுவை கிடைக்கும்.

​பேக்கிங் பவுடரா? பேக்கிங் சோடாவா?

பேக்கிங் பவுடரை விட பேக்கிங் சோடா 4 மடங்கு சக்தி வாய்ந்தது. நீங்கள் பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன் பயன்படுத்தினால் பேக்கிங் சோடாவை கால் டீஸ்பூன் வரை பயன்படுத்தலாம்.


இரண்டு வகையான பேக்கிங் பவுடர்கள் உள்ளன. பேக்கிங் பவுடர் ஈரப்பதத்தை தொட்டவுடன் எதிர்வினையை தொடங்கும் மற்றும் வெப்பத்தால் செயல்படுத்தப்படும். பேக்கிங் சோடா மோர், தயிர் அல்லது வினிகர்போன்ற அமில பொருள்களுடன் கலந்த பிறகு பேக்கிங் சோடா வினைபுரிகிறது.

​காலாவதியாகும் தேதி
பேக்கிங் சோடா

உலர்ந்த, குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்தால், பேக்கிங் சோடா மிக நீண்ட காலம் இருக்கும். இது தனித்துவமான நிறம் மற்றும் அமைப்பை கொண்டுள்ளது.



பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர் 3 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும். பேக்கிங் பவுடருக்கு வரையறுக்கப்பட்ட அமைப்பு என்று எதுவும் இல்லை.



No comments:

Post a Comment

Post Top Ad