உபிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா.. என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 24, 2021

உபிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா.. என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

உபிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா.. என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?



உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் சட்டசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓமைக்ரான் பரவலால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற வேண்டிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது ஓமைக்ரான். இந்த வைரஸால் பெரும் பாதிப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சாதாரண வகை வேரியன்ட்தான் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் பல நாடுகளில் பெரும் பீதியைக் கிளப்பி வருகின்றனர். லாக்டவுன் எல்லாம் போட ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவிலும் ஓமைக்ரான் பரவி வருகிறது. இதுவரை 350க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. எல்லோருக்குமே சாதாரண அறிகுறிகள்தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள 5 மாநிலத் தேர்தல் இந்த ஓமைக்ரான் பரவலால் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்குக் காரணம், அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி சேகர் யாதவ் கூறிய கருத்துக்கள்தான்.

ஒரு ஜாமீன் வழக்கின் விசாரணையின்போது திடீரென பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி இவர் பேசினார். கொரோனாவை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேபோல அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலையும் தள்ளி வைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிரு மாதங்கள் கழித்து தேர்தலை நடத்தலாம். தேர்தல் பிரசாரத்தையும் ரத்து செய்து விட்டு, டிவி மூலம் நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று கூறியிருந்தார்.

இதை தேர்தல் ஆணையம் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யப் போவதாக தலைமை தேர்தல் ஆணையம் சுஷில் சந்திரா கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம்தான் பெரியது. இங்குதான் பாஜக உள்ளிட்ட கட்சிகள் முட்டி மோதிக் கொண்டுள்ளன. பாஜக ஆட்சியைத் தக்க கடுமையாக போராட வேண்டிய நிலையும் உள்ளது.

ஒருவேளை தேர்தலை ஒத்திவைப்பதாக இருந்தால் உ.பியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்ற மாநிலங்கள் சிறியவை என்பதால் குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க ஆணையம் தீர்மானிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உ.பியில் மட்டும் தேர்தலை சில மாதங்களுக்கு தள்ளி வைத்து பல கட்டங்களாக அந்த மாநிலத்திற்கு தேர்தலை நடத்தவும் ஆணையம் தீர்மானிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் நேரில் ஆய்வு நடத்திய பின்னர்தான் இதுகுறித்துத் தெரிய வரும். மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை அறியவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad