கொரோனா சுனாமி அலை: உலக சுகாதார நிறுவனம் வேதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

கொரோனா சுனாமி அலை: உலக சுகாதார நிறுவனம் வேதனை!

கொரோனா சுனாமி அலை: உலக சுகாதார நிறுவனம் வேதனை!டெல்டா, ஒமைக்ரான் திரிபுகளால் உலகில் கொரோனா சுனாமி அலை ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது
டெல்டா, ஒமைக்ரான் ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களால் கிருமி தொற்று, உயிரிழப்பு ஆகியவற்றின் உலகளாவிய விகிதம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது

ஜெனீவாவை செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேநாம் கூறுகையில், “டெல்டா மற்றும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வகைகள் ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன. தொற்றின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதே வேகத்தில் தொற்று பரவினால், டெல்டா மற்றும் ஒமைக்ரான் திரிபுகளால் உலகில் கொரோனா சுனாமி அலை ஏற்படும் என்று தெரிவித்த டெட்ராஸ் அதேநாம், 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை நாம் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பேசிய அவர், “உலகின் பணக்கார நாடுகள் மாஸ்க், சிகிச்சை கருவிகள், நோயறிதல் கருவிகள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றைப் பதுக்கி வைத்துக் கொள்கின்றன. இது அடுத்தடுத்த புதிய வகை கொரோனா உருவாகக் காரணமாகி பேரபாயத்திற்கு வழிவகை செய்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாகவே தற்போது கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.” என்று சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு; மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சுமார் 18 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு 35 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad