இடிந்து விழுந்த பஸ் நிலையம்; புத்தாண்டு நேரத்தில் பரபரப்பு!
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் கோலாகலமாக தயாராகி வரும் சூழலில் பஸ் நிலையம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முந்தைய அதிமுக ஆட்சியில் மாட்டுத்தாவணியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த திமுக ஆட்சியில் இந்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
என் காளையோட மோத ரெடியா; ஜல்லிக்கட்டு பயிற்சியில் மதுரை திருநங்கை!
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன், வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து அண்ணா பஸ் நிலையம், பழங்காநத்தம் பஸ் நிலையம் ஆகியவை மூடப்பட்டன.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்து சென்று வரும் பேருந்துகள், நகருக்குள் செல்லாமல், ரிங் ரோடு வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்தது.
தற்போது மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 185 கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையம் இயங்காததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
தற்போது ஊரடங்குக்கு பிறகு பஸ் நிலைய கடைகள் திறக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. ஆனாலும் ஒமைக்ரான், கொரோனா என காரணம் காட்டி அடுத்த ஊரடங்கு போட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள தேநீர் கடையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது தேநீர் அருந்திக்கொண்டிருந்த பயணி ஒருவர் காயம் அடைந்தார். இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
ஏற்கனவே மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புத்தாண்டு விடுமுறை என்பதால் கூட்டம் அலை மோதியது. அந்த நேரம் பார்த்து, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment