Simbu: 'வெந்து தணிந்தது காடு' படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக இந்தப்படத்திற்காக காத்து வருகின்றனர்.
வருண் நடிப்பில் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், தற்போது சிலம்பரசன் நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
சிம்பு, கெளதம் மேனன் இணையும் படத்திற்கு ஆரம்பத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற தலைப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் படத்தின் டைட்டிலை மாற்றி பாரதியாரின் கவிதை வரிகளான 'வெந்து தணிந்தது காடு' என பெயர் வைத்தனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. அதில் சிம்புவின் லுக் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முன்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அண்மையில் வெளியான இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் சிம்புவின் ஜோடியாக சித்தி இட்னானி நடிக்கவுள்ளதாகவும், அவர் முத்துவின் பாவை என்றும் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவர் ஒருசில தெலுங்கு மற்றும் குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment