Happy New Year: நியூசிலாந்தில் பிறந்தது 2022..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 31, 2021

Happy New Year: நியூசிலாந்தில் பிறந்தது 2022..!

Happy New Year: நியூசிலாந்தில் பிறந்தது 2022..!




உலகியேலே முதல் நாடாக நியூ சிலாந்து நாட்டில் 2022ஆம் ஆண்டு பிறந்துள்ளது
கொரோனா, ஒமைக்ரான் என பெருந்தொற்றுகள் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், உலக மக்கள் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வரவிருக்கும் புத்தாண்டு உலக மக்களிடையே இன்னலை அகற்றி சிறப்பான இனிமை அளிக்க அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலகியேலே முதல் நாடாக நியூ சிலாந்து நாட்டில் 2022ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதையடுத்து, மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகிலேயே முதலாவதாகப் புத்தாண்டு கொண்டாடப்படுவது நியூசிலாந்தில்தான். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் ஏழரை மணிநேரம். அதன்படி, இந்திய நேரப்படி சரியாக 4.30 மணியளவில், நியூசிலாந்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி 12 மணி பிறந்துவிட்டது.
இதைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்து நகரின் ஸ்கை டவரில் வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையடுத்து தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடந்தன. நியூஸிலாந்தில் கரோனா வைரஸ் பரவல் இருந்தபோதிலும் அதற்கான கட்டுப்பாடுகளை புத்தாண்டுக்கு மட்டும் அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், சரீர விலகலைக் கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் நேரக் கணக்கின்படி பசிபிங் தீவில் உள்ள டோங்கா, சமோவா, கிரிபாட்டி, கிறிஸ்துமஸ் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும். ஆனால், நியூசிலாந்தில்தான் முதல் புத்தாண்டு பிறப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad