அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் - அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு வெளியாகி உள்ளது
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், 14 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிக்கு கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.
கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதமாகக் கருதப்படுகிறது. இதை அடுத்து பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில், அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களுக்கு வரும் அரசு ஊழியர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், மேலும் 14 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள், ஏழு நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறினால் ஆண்டு வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment