‘பசுமை தமிழ்நாடு' திட்டத்திற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு!
தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை வெளியிட்டது என்பதும் இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த பாராட்டு டுவிட்டில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக பசுமை தமிழ்நாடு என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு ஈசா அறக்கட்டளையின் சார்பில் எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்
மேலும் மண்வளத்தை மீட்பதற்கும், மாநிலத்தில் செழிப்பையும் நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் இது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment