முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முதல்வர் சந்திரசேகரராவ்!
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முதல்வர் சந்திரசேகரராவ்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் அங்கு வந்ததை அடுத்து இரு முதல்வர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்
அதன்பின் இரு மாநில உறவுகள் குறித்து இரு முதல்வர்களும் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment