புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை: சென்னைக்கும் எச்சரிக்கையா?
புதுவை மாநிலத்திற்கு சற்றுமுன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தை அடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் சென்னைக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் காற்றின் வேகம் அதிகமாக வீசுவதால் கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு புதுவை அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடற்கரை சாலையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment