இணையதளத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்: அமைச்சர் தகவல்!
இணையதளத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம் கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணையம் இல்லாமல் இன்று உலகில் எதுவுமே இல்லை என்றாகி விட்டது என்பதும் இணையத்தை தான் அனைத்திற்கும் பயன்படுத்தி
வருகிறோம் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதே நேரத்தில் இணையதளத்திற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் அடிமையானவர்கள் சிலர் இருக்கின்றார்கள் என்பதும் அதனால் அவர்களது உடல்நிலை பெரும் பாதிப்பு அடைகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இணையதளத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், மாணவர்களுக்கு தொலைத்த வாழ்க்கையை மீண்டும் பெற இணையதள சார்பு மீள்வாழ்வு மையம் அனைத்து
அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment