இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்: பாஜக அண்ணாமலை
இந்தியாவில் இரண்டு பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும் அவர்களில் ஒருவர் காங்கிரஸ்காரர்கள் இன்னொருவர் திமுக காரர்கள் என்றும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக அண்ணாமலை இந்தியாவில் இரண்டு பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் ஒன்று காங்கிரஸ்காரர்கள் மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஏற்கனவே இன்னொரு கட்சியில் இருந்தவர் என்றும் அவர் தற்போது வெள்ளை சட்டை அணிந்து நெற்றியில் பட்டை போட்டு கொண்டால் அவருடைய வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்
திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள்
மீதும் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்தால் முதல் நபராய் காவல்துறையை வரவேற்பது நானாகத்தான் இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment