முழங்கிய இயக்குநர் கவுதமன்; மூட்டை கட்டியது போலீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

முழங்கிய இயக்குநர் கவுதமன்; மூட்டை கட்டியது போலீஸ்!

முழங்கிய இயக்குநர் கவுதமன்; மூட்டை கட்டியது போலீஸ்!



தடுப்பூசிக்கு எதிராக முழக்கம் போட வந்த இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோரை போலீசார் மூட்டை கட்டி திருப்பி அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே கட்டாய தடுப்பூசி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இயற்கைவழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு, தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் இயக்குனர் கௌதமன்,சித்த மருத்துவர் திருத்தனிகாச்சலம், மக்கள் அறிவியல் இயக்கம் மருத்துவர் பிரேமா கோபாலகிருஷ்ணன்,திருநங்கை ரோஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊசி திணிப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்துவதை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை தடை விதித்திருந்த காரணத்தால் கலந்துகொள்ள வந்தவர்களில் ஒரு பகுதியினரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையே தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் கௌதமன் தலைமையிலான மற்றொரு பகுதியினர் பேரணியாக வந்து திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கைது செய்தவர்களை சீர்காழி போலீசார் விடுவித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்டு இருந்த மேடை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad