ரிப்போர்ட் கார்டு கேட்ட அமைச்சர்... சிஇஓக்கள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 23, 2021

ரிப்போர்ட் கார்டு கேட்ட அமைச்சர்... சிஇஓக்கள் அதிர்ச்சி!

ரிப்போர்ட் கார்டு கேட்ட அமைச்சர்... சிஇஓக்கள் அதிர்ச்சி!


\


பள்ளிகளின் கல்வி தரம் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவவர்களிடமும் ரிப்போர்ட் கார்டு கேட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெறும் பள்ளி,கல்வி நிலையங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

அவருக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாழொழிக்கு விமான நிலையத்தில் திமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது:

பள்ளிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நெல்லை உள்ளிட்ட 7-மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோனை கூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அந்த நாள் முதல் மாணவர்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி விட்டு அமர்வது உள்ளிட்டவற்றை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரப்பட்டிருந்தது.

மேலும் சேதமடைந்த பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்கக்கூடாது; பள்ளிகளில் உள்ள பயன்பாடு இல்லாத மின்சார பொருட்கள் சோதனை செய்தல் உள்ளிட்ட அனைத்தை சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அதையும் மீறி நெல்லையில் தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான சம்பவம் நிதழ்ந்துள்ளது. இதுபோல் சம்பவம் நடந்துள்ளது இனிமேல் இப்போல் சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்.

நெல்லையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் தரம் மற்றும் பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் ரிப்போட் கொடுத்து வருகின்றனர்‌. இந்த மாத இறுதிக்குள் பள்ளிகளின் தரம் குறித்து முழு ரிப்போட் வரும்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பள்ளிகளுக்கு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு வேலி வைக்க அறிவுறுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad