மாணவர்களுக்கு புதிய சிக்கல்; பெற்றோர் ஷாக்!
பள்ளி மாணவர்களுக்கு வந்துள்ள புதிய சிக்கல் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
திருநெல்வேலி டவுன் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்டர்வெல் நேரத்தில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்றபோது கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த பிறகு வழக்கம்போல் பள்ளி மாணவர்கள் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அந்தவகையில் 30 வருடங்களாக செயல்பட்டு வந்த பாலர் பள்ளி கடந்த 15 வருடங்களாக
செயல்படாமல் பாழடைந்து கிடப்பது சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செண்பகராமபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பாலர் பள்ளி செயல்பட்டு வந்தது. இதில் 75க்கும் மேற்பட்ட சிறு பாலர்கள் படித்து வந்தனர்
இவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து உணவு வகைகள், அடிப்படைக் கல்வி, விளையாட்டு, குழந்தை பாட்டு உட்பட அனைத்தும் கற்றுக்கொடுத்து பாலர் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக பாலர் பள்ளிக் கட்டிடம் படிப்படியாக சேதமடைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதே பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது கடந்த 15 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் பாலர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தை பாலர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் இந்த வாடகை கட்டிடம் குழந்தைகளுக்கு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனவே பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment