கோவையில் காவல் ஆய்வாளர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை..!
கோவைபுதூர் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தற்கொலை
கோவை: கோவைபுதூர் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தற்கொலை, பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேவகோட்டை, கரும்முழி பகுதியை சேர்ந்தவர் காவலர் செல்வராஜ். இவர் தற்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். கோவைபுதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4ம் அணியில் ஆய்வாளராகஇந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஆய்வாளர் செல்வராஜ் மதியம் 2.10 மணிக்கு தனது அறையில் கைலிமூலம் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முகாமில் உள்ள காவலர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த உயரதிகாரிகள் கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பணிபுரிந்து வருகிறார்.
மேலும், ஆய்வாளர் செல்வராஜ் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்துகொண்ட காவல் ஆய்வாளர் செல்வராஜிற்கு பாபா அருள் ராணி ஜுலியட் என்ற மனைவியும், சந்தோஷ், கிருஸ்டோபர் என்ற இருமகன்களும் உள்ளனர். இதில் சந்தோஷ் ஆவடியில் காவலராக வேலைபார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment