அருவிகளில் குளிக்க அனுமதி; கட்டாயம் இதை செய்யணும்!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ளது.
தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் குற்றால அருவிகள் திறக்கப்பட்டது. அதுபோல் இங்குள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிக்கு அனுமதி வழங்க கோரி சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க முடிவு செய்தனர்.
அதன்படி இன்று 22.12.2021 முதல் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீரின் அளவினைப் பொருத்தும், சுற்றுலா பயணிகள் நலன் கருத்தில் கொண்டு குளிக்க அனுமதிக்கப்படும்.
அருவிகளுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் சோதனை சாவடிகள் வழியாக காலை சுமார் 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
சுற்றுலா பயணிகள் அனைவரும் வன விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று அருவிகள் திறக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment