மதுரைக்கு சர்வதேச ஏர்போர்ட்.. இதெல்லாம் ஒரு லாஜிக்கா? வர்த்தக சங்கம் எதிர்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 22, 2021

மதுரைக்கு சர்வதேச ஏர்போர்ட்.. இதெல்லாம் ஒரு லாஜிக்கா? வர்த்தக சங்கம் எதிர்ப்பு!

மதுரைக்கு சர்வதேச ஏர்போர்ட்.. இதெல்லாம் ஒரு லாஜிக்கா? வர்த்தக சங்கம் எதிர்ப்பு!மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து கொடுக்க முடியாது என மத்திய அமைச்சர் கூறியதற்கு வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம் எதிர்ப்பு.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், நான்காவதாக மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையமே இருக்கும் சூழலில், தமிழகத்துக்கு நான்காவது சர்வதேச விமான நிலையம் தர முடியாது என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மறுத்துள்ளார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியாது என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருப்பதற்கு வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்க முடியாது என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தென் தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

சில வட மாநிலங்களில் ஒரேயொரு சர்வதேச விமான நிலையம் இருப்பதால் தமிழகத்துக்கு நான்காவது சர்வதேச விமான நிலையம் தர முடியாது என்று சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை. உள்கட்டமைப்பு என்பது தேவையை பொறுத்தது.

நாட்டிலேயே அதிகம் தொழில்மயமான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 21 மாநிலங்கள் செலுத்தும் ஜிஎஸ்டியை காட்டிலும் தமிழகம் அதிகம் ஜிஎஸ்டி செலுத்துகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில் தளவாடங்கள், தொழிற்பேட்டைகள், வேளாண் பொருள் ஏற்றுமதி மண்டலங்கள் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட நேரடியாக ஏற்றுமதி செய்யும் திட்டத்தை பிரதமர் ஊக்குவித்து வருகிறார்.

மதுரை மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளன. காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகவே, மதுரை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச இணைப்புகள் தேவை.

இதுபோக சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. யாத்ரீக தலங்களாக இருப்பதால் திருப்பதி, வாரணாசி விமான நிலையங்களுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரைக்கு வருவதை விட அங்கெல்லாம் குறைவான பயணிகளே வருகின்றனர். அதிக பக்தர்கள் வரும் மீனாட்சி அம்மன் கோயில் கொண்ட மதுரைக்கு ஏன் சர்வதேச அந்தஸ்து வழங்கப்படவில்லை?

மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் வழங்கப்படாது என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியிருப்பது தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சிக்கு எதிரானது. தமிழகத்தின் ஜிஎஸ்டி பங்களிப்பில் ஒரு விழுக்காடு மட்டுமே பங்களிக்கும் கேரளாவுக்கு நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மதுரை விமான நிலையத்தை தமிழகத்தின் 4ஆவது சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது?No comments:

Post a Comment

Post Top Ad