புதிய காற்றழுத்தத் தாழ்வு: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 17 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய காற்றழுத்தத் தாழ்வால் டிசம்பர் 17 முதல் 19 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் நிலநடுக்கோட்டு பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment