55 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு; இறைச்சிக்கு தடை! – கேரளா அதிரடி முடிவு!
கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் 55 ஆயிரம் கோழி, வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்துப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள வாத்து பண்ணை ஒன்றில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் சமீபத்தில் பறவை காய்ச்சலால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து ஆலப்புழாவில் தொடர்ந்து பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருவதால் பண்ணைகளில் உள்ள 20,000 வாத்துகளையும், 35,000 கோழிகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கேரளா முழுவதும் வாத்து, கோழி மற்றும் காடை ஆகியவற்றின் இறைச்சியை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment