சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா! ஒமிக்ரானா என பரிசோதனை!
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில்
ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவருக்கு சாதாரண கொரோனாவா அல்லது ஒமிக்ரான் பாதிப்பா என்பதை கண்டறிய அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment