சென்னையில் மீண்டும் விலை உயர்ந்த தக்காளி! – இன்றைய நிலவரம்!
சென்னையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக
கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் தக்காளி லாரிகளின் வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.90க்கும், உள்ளூர் நாட்டு தக்காளி கிலோ ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது.
No comments:
Post a Comment