இனிமே ஃபுல் டே ஸ்கூல்? அமைச்சர் எடுக்கப் போகும் முக்கிய முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 24, 2021

இனிமே ஃபுல் டே ஸ்கூல்? அமைச்சர் எடுக்கப் போகும் முக்கிய முடிவு!

இனிமே ஃபுல் டே ஸ்கூல்? அமைச்சர் எடுக்கப் போகும் முக்கிய முடிவு!



அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை முழு நேரமும் திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன்(CEO) அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக, கடந்த ஆண்டு் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் முககவசம், தடுப்பூசி என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கொரோனா ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அவர்களை தொடர்ந்து 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2 ஆம் தேதி வரை, ஒரு வாரம் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது, தற்போது நடைமுறையில் உள்ள சுழற்சிமுறை வகுப்புகளுக்கு பதிலாக வழக்கம்போல் முழுநேர வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் (CEO) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகளை வழக்கம்போல் முழுநேரமும் இயக்குவதில் நிர்வாக ரீதியாக உள்ள சிக்கல்கள், மாணவிகள் மீதான பாலியல் தொல்லை, ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார், நெல்லை பள்ளி கட்டட விபத்து, அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

கிட்டதட்ட இரண்டாண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு சரிவர போகாததால் அவர்களின் கற்றலில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். பெற்றோரின் நியாயமான இந்த கவலையை கருத்தில் கொண்டு, பள்ளிகளை முழுநேரமும் இயக்க அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

ஆனால், கொரோனா ஒமைக்ரானாக உருமாறி பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை கிளப்பி உள்ளதன் காரணமாகவும், மீ்ண்டும் எப்போது வேண்டுமானாலும் லாக்டவுன் அறிவிக்கபடலாம் என்ற சூழல் நிலவுவதாலும், தற்போதைக்கு பள்ளிகளை முழுநேரமும் இயக்க இயலுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.இந்த கேள்விக்கான விடை வரும் 28 ஆம் தேதி தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

Post Top Ad