பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க; தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 24, 2021

பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க; தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க; தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!



பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* ரயில் எண் 20973 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் அஜ்மீர் - ராமேஸ்வரம் இடையில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1, 8 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.

* ரயில் எண் 22632 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பிகானேர் - மதுரை இடையில் இயக்கப்படுகிறது. இது டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.
* ரயில் எண் 12636 கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை - சென்னை எழும்பூர் இடையில் இயக்கப்பட்டு வருகிறது. இது வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 6 ஆகிய தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரக்கோணம் - காட்பாடி இடையிலான பாலம் எண். 299ல் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,

* டிசம்பர் 25ஆம் தேதி காலை 10.50 மணிக்கு புறப்படும் ரயில் எண் 12245 கொண்ட ஹவுரா - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் குண்டூர், ரேணிகுண்டா, பாகலா ஜங்ஷன், காட்பாடி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


* டிசம்பர் 25 மற்றும் 26ல் காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் எண் 12295 கொண்ட கே.எஸ்.ஆர் பெங்களூரு - தானாபூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் தர்மாவரம் ஜங்ஷன், கூடி, தோனே, நந்த்யால், குண்டூர் ஜங்ஷன், விஜயவாடா வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* டிசம்பர் 26ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் ரயில் எண் 12246 கொண்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் தர்மாவரம் ஜங்ஷன், கூடி, தோனே, நந்த்யால், குண்டூர் ஜங்ஷன், விஜயவாடா வழியாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad