தேமுதிக கூட்டணியும், விஜயகாந்த் புதிய படமும்; பிரேமலதா முக்கியத் தகவல்!
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அனைவருக்கும் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். கொரானா ஒருபுறமும், ஒமைக்ரான் மறுபுறமும் பரவி வருகிறது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் பரவலைப் பொறுத்தவரை மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் குறைத்துள்ளது. அதேசமயம் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போடுவதை தமிழக அரசு இன்னும் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெண்களின் திருமண வயது 21ஆக மாற்றுவது வரவேற்கத்தக்க விஷயம். பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களை தயார்படுத்தி கொள்ள முடியும். மக்கள் வரவேற்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்றார். விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்று பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்புகையில், இது முற்றிலும் தவறான செய்தி. அது மாதிரி ஒன்றும் இல்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசுகையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல் தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment