இதில் உங்களுக்கான சிறந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் எது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 24, 2021

இதில் உங்களுக்கான சிறந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் எது?

இதில் உங்களுக்கான சிறந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் எது?
போன் ரீசார்ஜ் செய்வதில் குழப்பமா. எந்த திட்டத்தை தேர்வு செய்வது என தெரியவில்லையா. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

நவம்பர் மாத இறுதியில் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் ஐடியா, ஜியோ ஆகியன தங்கள் பயனர்களுக்கான திட்டங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, விலையேற்றத்தை சமன் செய்யும் நோக்கிலும், பயனர்கள் வேறு நெட்வொர்கிற்கு தாவாமல் தடுக்கவும் பல புதியத் திட்டங்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றன.

ஆனால், எந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது என்பதில் பயனர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கும். எனவே, தற்போதைய நிலவரப்படி, நிறுவனங்களிடம் உள்ள அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏர்டெல்

ஏர்டெல் இப்போது 1ஜிபி டேட்டா (மொத்தம்) மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.155 திட்டத்தை வழங்குகிறது. 28 நாள்களுக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.179 திட்டமும், 84 நாட்களுக்கு 6ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.455 திட்டமும் உள்ளது.

நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா திட்டத்திற்கு வரும் ஏர்டெல் ரூ.209 திட்டத்தின் கால அளவு 21 நாட்களாக உள்ளது. ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 24 நாள்களுக்கு வழங்கும் ரூ.239 திட்டமும், 28 நாள்களுக்கு 1ஜிபி டேட்டாவை ரூ.265க்கு வழங்கும் திட்டமும் நடப்பில் உள்ளது.

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா திட்டங்களை பொறுத்தவரை, ரூ.299 திட்டமானது 28 நாட்களுக்கும், ரூ.479 திட்டமானது 56 நாள்களுக்கும், புதிய ரூ.666 திட்டமானது 77 நாள்களுக்கும். ரூ.719 திட்டமானது 84 நாள்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா பயன்பாட்டுக்கு, ஏர்டெல் ரூ.359 திட்டத்தை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். முறையே ரூ.549 திட்டம் 56 நாள்களுக்கும், ரூ.839 திட்டம் 84 நாட்களுக்கும் கிடைக்கிறது.

ஏர்டெல் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை 28 நாள்களுக்கு வழங்கும் ரூ.449 திட்டத்தையும் வழங்குகிறது. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்கும், 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.599 திட்டத்தையும், 56 நாள்களுக்கு செல்லுபடியாகும் ரூ.699 திட்டத்தையும் ஏர்டெல் பயனர்கள் அனுபவிக்கலாம்ச்.
வோடாபோன் ஐடியா

வோடபோன் ஐடியா 200எம்பி கொண்ட ரூ.129 திட்டத்தை 18 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.149 திட்டம் 1ஜிபி டேட்டா உடன், 21 நாள்களுக்கும், ரூ.155 திட்டம் 1ஜிபி டேட்டா உடன் (மொத்தம்) 24 நாள்களுக்கும் வழங்குகிறது. ரூ.179 திட்டத்தில் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவும் (மொத்தம்), 84 நாள்களுக்கு ரூ. 459 திட்டத்தில் 6ஜிபி டேட்டாவும் (மொத்தம்) கிடைக்கிறது.

56 நாட்களுக்கு 4ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.329 திட்டமும், 30 நாள்களுக்கு 25ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.327 திட்டமும், 60 நாள்களுக்கு 50ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.537 திட்டமும் உள்ளது.

நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவிற்கு, 21 நாள்களுக்கு ரூ.249 திட்டத்தையும், 42 நாள்களுக்கு ரூ.399 திட்டத்தையும், 56 நாள்களுக்கு ரூ.479 திட்டத்தையும், 70 நாள்களுக்கு ரூ.599 திட்டத்தையும், 77 நாள்களுக்கு ரூ.666 திட்டத்தையும், 84 நாள்களுக்கு ரூ.719 திட்டத்தையும் வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா திட்டங்களுக்கு, 28 நாள்களுக்கு ரூ.359 திட்டத்தையும், 56 நாள்களுக்கு ரூ.539 திட்டத்தையும், 84 நாள்களுக்கு ரூ.839 திட்டத்தையும் வழங்குகிறது. 28 நாள்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த ரூ.409 திட்டமும், 28 நாள்களுக்கு ரூ.475 திட்டமும், 56 நாள்களுக்கு ரூ. 699 திட்டமும், 70 நாள்களுக்கு ரூ.901 திட்டமும் வோடாபோன் ஐடியா வழங்குகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad