ஜெயலலிதா ஆவியுடன் பேசி வருகிறேன்... எஸ்.வி.சேகர் புது உருட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 24, 2021

ஜெயலலிதா ஆவியுடன் பேசி வருகிறேன்... எஸ்.வி.சேகர் புது உருட்டு!

ஜெயலலிதா ஆவியுடன் பேசி வருகிறேன்... எஸ்.வி.சேகர் புது உருட்டு!



மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவியுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நன்மை, தீமைகளின் அடிப்படையிலேயே மரணத்துக்கு பின் அவனுக்கு சொர்க்கமோ, நரகமோ கிடைக்கிறது எனவும், மனித ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கற்பிதங்களை வெகுஜனங்கள் நம்பியும் வருகின்றனர். ஆனாலும் சொர்க்கம், நரகம், ஆவி, ஆன்மா இவையெல்லாம் இன்றளவும் மனிதனின் ஆறாம் அறிவுக்கு எட்டாத விஷயங்களாகவே உள்ளன.

அதேசமயம் தங்களுக்கு ஆவி, ஆன்மாகளுடன் பேசு திறன் உள்ளது. அறிவியல்ரீதியான இந்த வித்தை தங்களுக்கு தெரியும் எனக்கூறி அவ்வபோது சிலர் நம்மை மிரட்சி அடைய செய்து விடுகின்றனர்.

இத்தகைய மிரட்சி மனிதர்களின் வரிசையில் பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் இணைந்துள்ளார். 'தான் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசி வருவதாக புதிதாக உருட்டியுள்ளார்.

அதிசயத்தக்க இந்த அனுபவம் குறித்து அவர் மேலும் கூறும்போது, "ஜெயலலிதாவின் பாராட்டுக்களை பெற்றிருந்த நான், அதிமுகவில் இணைந்து பணியாற்றியபோது, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கி செலவு செய்யாத ஒரே ஆளாக திகழ்ந்தேன்.

இறந்தவர்களின் ஆவியை தொடர்பு கொண்டு அதனுடன் பேசுவது ஓர் அறிவியல் முறை. இந்த முறையில்தான் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசி வருகிறேன். இதேபோல் எனது தந்தையின் ஆவியுடனும் அவ்வபோது பேசி கொண்டிருக்கிறே்ன்.

ஆன்மாவுடன் பேச வேண்டுமென நாம் மட்டும் நினைத்தால் போதாது. அவர்களும் நினைக்க வேண்டும்" என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.வி.சேகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக , சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அப்போதில் இருந்து அவரின் ஆவியுடன் பேசுவதாக ஒரு சாமியார், உமா சங்கர் ஐஏஎஸ் உள்ளிட்டோர் கூறி வந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad