பாரத் நெட் திட்டத்துக்கு டெண்டர்: அறிவிப்பு வெளியானது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

பாரத் நெட் திட்டத்துக்கு டெண்டர்: அறிவிப்பு வெளியானது!

பாரத் நெட் திட்டத்துக்கு டெண்டர்: அறிவிப்பு வெளியானது!


பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கிராம மக்களை இணைத்து அரசு இணையதள சேவைகளை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தநிலையில் தமிழகத்திற்கு ரூபாய் 1730 கோடி மதிப்பில் 12,625 கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்த தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது இந்த திட்டத்தில் கண்ணாடி இழை கேபிள்கள் மொத்தமாக 15 சதவீதம் நிலத்திற்கு அடியிலும் 85% வான் வழியிலும் மொத்தமாக 49 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது.


இந்தத் திட்டம் செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து இணைய சேவைகள் கேபிள் டிவி சேவைகள், மின் ஆளுமை சேவைகள், தங்கள் கிராமத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தேர்ந்தெடுக்க டெண்டர் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாரத் நெட் திட்டத்திற்காக அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், திமுக குற்றம் சாட்டி இருந்தன. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.
இந்நிலையில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து ஒன்றிய வர்த்தக அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் குறைகளை களைந்து மீண்டும் டெண்டர் விட ஒன்றிய அரசு அப்போது உத்தரவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad