என்னை கட்சியாவே மதிக்கலயா? அன்புமணிக்கு சீமான் பதிலடி!
நாம் தமிழரை கட்சியாகவே மதிக்கவில்லையா என அன்புமணிக்கு சீமான் கேள்வி.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு சமூக நீதி பேசும் எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும், தமிழகத்தில் பாமக மட்டுமே சமூக நீதி கட்சி எனவும் பாமக கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.இந்நிலையில், உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தான் கண்டித்து பேசியதாகவும், தன்னை ஒரு கட்சியாகவே மதிக்கவில்லையா எனவும் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை நான் கண்டித்தேன். என்னை நீங்கள் கணக்கிலேயே சேர்ப்பதில்லையா? நான் தான் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறேன். என்னை நீங்கள் கட்சியாகவே கருதவில்லை போல இருக்கே.
அன்புமணி பொத்தாம் பொதுவாக பேசுகிறார். அந்த நேரத்தில் நான் பேட்டியாகவும் கொடுத்தேன், கண்டித்து அறிக்கையும் வெளியிட்டேன். தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக நாம் தமிழர்தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment