திருச்சி அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி பலி! கார் ஓட்டுநர் தப்பியோட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 19, 2021

திருச்சி அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி பலி! கார் ஓட்டுநர் தப்பியோட்டம்

திருச்சி அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி பலி! கார் ஓட்டுநர் தப்பியோட்டம்திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி மீது பின்னால் வந்த கார் மோதியதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியயநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயியான ஜோசப் (65). இவரது மனைவி ஆர்க்னஸ்மேரி(60). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வந்தலைக்கூடலூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஜோசப் அவரது மனைவி இருவரும் தனது இருசக்கர வாகனத்தில் சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக வந்து பணமங்கலம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் தப்பி ஒடிய நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad