சேகர்பாபு போடும் வேஷம்: கிழித்து தொங்கவிட்ட எச் ராஜா!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த வந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்கள் சந்தித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு, தரிசனம் செய்வதற்காக வந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது எச் ராஜா கூறியதாவது:
தில்லை நடராஜர் கோவிலில் தேர் திருவிழாவிற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து 5 மணி நேர போராட்டம் நடத்தினர். அதன் பின்பு எஸ்பி நேரில் வந்து அனுமதி வழங்கியதால் தில்லை நடராஜருக்கு தேர் திருவிழா தற்போது நடத்தப்பட்ட இருக்கிறது.
இது இந்து தர்மத்திற்கு கிடைத்த வெற்றி. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஜோதி லிங்கம் ராமேஸ்வரம் திருக்கோவில் ஆகும். காசியில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் அனைத்தும் ராமேஸ்வரத்தில் இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை பிரதமர் மோடியிடம் முன் வைக்க உள்ளேன்.
தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட கோவில்கள் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 15 சென்டில் பட்டா இடத்தில் இருந்த கோவில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் வேஷம் போடுகிறார்.
இந்து அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்து அறநிலைத்துறை மிக மோசமான துறையாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment