தனுஷின் ரீல் அப்பா மாணிக்க விநாயகம் மரணம்: பிரபலங்கள் இரங்கல்
பிரபல பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சீயான் விக்ரம் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான தில் படம் மூலம் பாடகராக திரையுலகில் அறிமுகமானவர் மாணிக்க விநாயகம். ரோஜாக்கூட்டம், ஜெயம், இயற்கை, நியூ, சந்திரமுகி, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார்.
அவர் பாட்டு பாடியதுடன், படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தனுஷின் திருடா திருடி படம் மூலம் நடிகரானார். அந்த படத்தில் தனுஷின் தந்தையாக நடித்திருந்தார்.
78 வயதான மாணிக்க விநாயகத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலமானார்.
மாணிக்க விநாயகத்தின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment