புதுச்சேரியில் சைலண்டாக உள்ள கொரோனா... பொங்கல் வரை கெடு விதித்த துணைநிலை ஆளுநர்!
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேரிடம் நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 8 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 9 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 127 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,29,415 நபர்கள் பெருந்தொற்றாள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,27,408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1880 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசி முதல் தவணை 8,27,052 பேரும், இரண்டாம் தவணை 5,46,888 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 13,73,940 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளிடம் மாநில எல்லைகளில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் சரிபார்க்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்குள் புதுச்சேரியில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment