ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம் தான்.. ஷாக் கொடுத்த சட்டத்துறை அமைச்சர்!
49-ம் ஆண்டு அண்ணா விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒமைக்கிரான் பரவல் அதிகமானால் ஜல்லிகட்டு நடப்பது சந்தேகம் தான் என தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்ணா தமிழ்க் கழகம் சார்பில் 49-ம் ஆண்டு அண்ணா விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களின் மூலம் தான் ஒமைக்ரான் தொற்று பரவுகிறது. அரசு அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் ஏற்கனவே 100% கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல் படுத்தாமல் இருந்தால் ஜல்லிகட்டு போட்டி நடக்கும் என்றும் மாறாக தொற்று பரவுவது அதிகமானால் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு ஜல்லிகட்டு நடப்பது சந்தேகம் தான் என கூறினார்.
மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை. தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெற எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் வெளியுறவு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் விடுவிக்க படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று சிறையில் இருக்கும் நளினி வழக்கில்உச்ச நீதிமன்றம் ஆளுநரே முடிவு எடுக்கலாம் என கூறி உள்ளது . ஆளுநர் முடிவுக்கு காத்திருக்கிறோம். 2022 ல்ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிஅவர் உரிமைக்காக உச்ச நீதி மன்றம் சென்றுள்ளார் . தேடுதல் வேட்டை நிறுத்தப்படவில்லை தலைமறைவாக இருக்கும் இடத்தைநெருங்கி விட்டோம் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறினார்.
No comments:
Post a Comment