ஜனவரி முதல் இதெல்லாம் மாறப்போகுது.. சிலிண்டர் விலை முதல் ஏடிஎம் வரை!
ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்.
ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை ஏற்ற இறக்கம் என பல்வேறு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. அதிலும், புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். இதில் பெரும்பாலான விதிமுறைகள் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் வகையிலே உள்ளன. ஆக, ஜனவரி முதல் மாறவிருக்கும் விதிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்.
ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச வரம்புக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க இதுவரை 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி 21 ரூபாய் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையலுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. எனவே,
ஜனவரியிலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையலுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. எனவே, ஜனவரியிலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணத்தை (Service Charge) ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது.
ஆடைகளின் விலை உயர்வு
ஜவுளிப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விகிதம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆடைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment