புதுவையை மிரட்டும் கொரோனா… இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!
புதுச்சேரியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும், இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2265 பேரிடம் நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில், புதுச்சேரியில் 2 இருவர், காரைக்காலில் 4 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 9 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 119 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மாநிலத்தில் இதுவரை 1,29,434 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,27,435 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1880 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 8,29,775 பேரும், இரண்டாம் தவணை 5,51,294 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 13,81,069 பேர்
தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
ஒமைக்ரான் கம்மிங் ஒத்து; புதுச்சேரியில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று!
இரண்டு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுவை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரி கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment