இறந்த நிலையில் வலையில் சிக்கிய இரண்டரை டன் திமிங்கலம்… ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்!
புதுச்சேரி மீனவர் வலையில், இரண்டரை டன் எடையிலான திமிங்கலம் சிக்கியுள்ளது.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து, சரவணன் என்ற மீனவர் தலைமையில் 4 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 25 கிலோ மீட்டர் தூரம் சென்று மீன்பிடித்த போது, வலையில் பெரிய அளவிலான மீன் சிக்கிக் கொண்டது.
வலையின் அளவை விட மீன் எடை அதிகமாக இருந்தால் படகுடன் மீனை துறைமுகம் வரை அவர்கள் இழுத்து வந்தனர். தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு வந்து பார்த்த பொழுது 20 அடி நீளமுள்ள திமிங்கலம் சிக்கி இருப்பது
தெரியவந்தது.
கோம ராசி இனத்தைச் சேர்ந்த இந்த திமிங்கலம் இரண்டரை டன் எடை கொண்டது. தகவல் அறிந்து போலீசார் இதனை பார்த்துவிட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். திமிங்கலம் இறந்த நிலையில் இருப்பது அப்போது தெரிய வந்தது.
வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அதனை பிரேத பரிசோதனை செய்து துறைமுகத்தில் அடக்கம் செய்தனர்.
திமிங்கிலம் ஒன்று மீனவர் வலையில் சிக்கிதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் பலரும் துறைமுகத்திற்கு வந்து திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
No comments:
Post a Comment