புதுச்சேரியில் ஒமைக்ரான் எதிரொலி… புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிக்கலா?\
புதுச்சேரியில் இருவருக்கு ஒமைக்ரான் எதிரொலியால், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்படும் ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர், ஆளுநரிடம் தெரிவிப்போம் என சுகதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இன்று இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த 80 வயது முதியவருக்கும், நகரப்பகுதியில் 20 வயது பெண் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இருந்த நிலையில் இவர்களது ரத்த மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திறகு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
மேற்கொண்டுள்ளனர். அங்கு இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
முதன்முறையாக புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், புதுச்சேரியில் சமூக பரவலாக இருவருக்கு ஒமைக்ரான் வந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர், ஆளுநரிடம் தெரிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment